இலங்கை

ஜனாதிபதி ஊடக விருது விழாவில் வெளிநடப்பு செய்த பத்திரிகை ஆசிரியர்மார் !

 

ஜனாதிபதியின் ஊடக விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட விஜய நியூஸ்பேப்பர் நிறுவனத்தின் பத்திரிகை ஆசிரியர்மார் நால்வர் அதிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

விழா ஆசன ஒழுங்கமைப்பு முறையாக இல்லாத காரணத்தினால் அவர்கள் வெளிநடப்பு செய்ததாக தகவல்.

வடக்கு மாகாண ஆளுநருக்கு உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டமை குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விஜய நியூஸ்பேப்பர் நிறுவனத்தில் லங்காதீப – சண்டே டைம்ஸ் – தேஷய – தமிழ் மிரர்- டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகள் வெளிவருகின்றன. அத்துடன் பல சஞ்சிகைகளையும் அது வெளியிடுகின்றது.

ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்தனவின் தந்தையாரின் தலைமையில் இந்த நிறுவனம் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை இந்த விடயம் குறித்து கவலை வெளியிட்டுள்ள அமைச்சர் ருவன் விஜேவர்தன , நிகழ்வு ஏற்பாடுகள் ஒழுங்காக செய்யப்படாமை குறித்து முழு விசாரணை நடத்தப்படுமென தெரிவித்துள்ளார்