Breaking News

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி நடக்குமென தகவல் !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நவம்பர் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த தேர்தல் ஆணைக்குழு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.

இன்று காலை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடக்கும் சந்திப்பில் இது குறித்து அபிப்பிராயத்தை கோரவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை செயற்பாடுகள் பாதிக்காதவண்ணம் தேர்தல் திகதியை நிர்ணயித்துள்ளாரென அறியமுடிந்தது.

விசேட வர்த்தமானி அறிவித்தலால் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும். வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகலாமென அறியமுடிந்தது.