இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 இல் – மாகாண தேர்தலுக்கு வாய்ப்பு குறைவு !

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடக்கலாமென உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒக்டோபர் முதல் வாரத்தில் இதற்கான அழைப்பு விடுக்கப்படலாம் என அறியமுடிந்தது.

அதற்கு முன் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்துவது பற்றி உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி வினவியுள்ளார்.

எவ்வாறாயினும் மாகாண சபை தேர்தல் நடத்த போதியளவு கால அவகாசம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இருக்குமா என்பதை நோக்கினால் அதற்கான வாய்ப்பு குறைவென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.