இலங்கை

ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை – ஐ.தே க.பின்வரிசை எம்பிக்கள் முடிவு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம் பிக்கள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுக்கத் தவறினார் ,அரசியலமைப்பினை மீறிய அவரின் கடந்த கால செயற்பாடுகள் என்பன போன்ற விடயங்களை உள்ளடக்கி இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றவியல் பிரேரணையை தயாரிக்கும் பணிகள் தற்போது நடப்பதாகவும் எம் பிக்களின் கையொப்பங்கள் பெறப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் விரைவில் அதனை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மேலும் சொல்லப்பட்டது.