இலங்கை

ஜனாதிபதிக்கும் கம்போடிய மன்னருக்குமிடையிலான சந்திப்பு…

கம்போடியா அரசின் விசேட அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் கம்போடிய மன்னருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் இடம்பெற்றது.

இன்று முற்பகல் கம்போடிய அரச மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதியை கம்போடிய மன்னர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இலங்கை ஜனாதிபதியை வரவேற்பதற்காக மிகவும் கோலாகலமான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பண்டைய காலந்தொட்டு இரண்டு நாடுகளுக்குமிடையில் இருந்துவரும் உறவுகளை நினைவுகூர்ந்த கம்போடிய மன்னர் தனது அழைப்பின்பேரில் கம்போடியா நாட்டுக்கு வருகை தந்ததையிட்டு ஜனாதிபதியிடம் தனது நன்றியை தெரிவித்தார்.