உலகம்

சோமாலியாவில் குண்டுவெடிப்புகள் – பலர் பலி

 

கென்ய எல்லைக்கு அருகில் சோமாலிய பொலிசாரின் கண்காணிப்பு வாகனம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 11 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

அதேநேரம் சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் மற்றுமொரு குண்டு வெடித்துள்ளது.

இதில் குறைந்த பட்சம் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இரண்டு தாக்குதல்களுக்கும் சோமாலிய முஸ்லிம் பயங்கரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.

இந்த பயங்கரவாத குழுவே நேற்றையதினம் 3 பொலிஸ் அதிகாரிகளை கடத்தி சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.