உலகம்

சொக்லேட் சாப்பிட்டமைக்கு மன்னிப்புக் கோரினார் கனடா பிரதமர் !

 

அரசின் முறைகேடுகள் குறித்து பாராளுமன்றத்தில் நடந்த விவாதம் ஒன்றின் போது யாருக்கும் தெரியாமல் சொக்லேட் ஒன்றை சாப்பிட்டமைக்காக வருத்தம் தெரிவித்தார் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ.

பிரதமர் மேசைக்கு கீழ் குனிந்து எதோ சாப்பிடுவதை கண்ட எதிர்க்கட்சி எம் பி ஸ்கொட் ,பிரதமர் டோனட் வகையான உணவொன்றை உண்பதாக குரல் எழுப்பினார்.இதனையடுத்து சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து சபையில் எழுந்து நின்று மன்னிப்பைக் கோரிய பிரதமர் ,அது சொக்லேட் தான் என்று குறிப்பிட்டார்.

உணவுகளை உண்பதன் மூலம் ,பிரதமர் சபையை அசுத்தமான இடமாக்க முயல்வதாக எதிர்க்கட்சி எம் பிக்கள் குரல் எழுப்பியவண்ணம் இருந்தனர்.

கனேடிய பாராளுமன்ற சபைக்குள் உறுப்பினர்கள் நீர் மட்டுமே அருந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.