இலங்கை

சேதனப் பசளை தயாரிப்பு நிலையத்தை மெதிரிகிரியவில் திறந்துவைத்தார் மைத்ரி !

 

மெதிரிகிரிய, லங்காபுர உள்ளிட்ட சுற்றுப் பிரதேசங்களை கழிவுகளற்ற நகரமாக மாற்றும் நோக்குடன் சுங்காவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொறிமுறைச் சேதனப் பசளை தயாரிப்பு மத்திய நிலையத்தை இன்று (01) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

ஜெயிக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 50 தொன் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய முடியும் என்பதுடன், அதன் மூலம் சுமார் 20 தொன் சேதனப் பசளையை தயாரிக்கவும் முடியும். இதற்காக 230 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து சேதனப் பசளை மத்திய நிலையத்தை திறந்துவைத்த ஜனாதிபதி , அங்கு கழிவு மீள்சுழற்சி செய்யப்படுவதையும் பார்வையிட்டார்.

சோமாவதி ரஜமஹா விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேரர், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் ஜெயிக்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளும், வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, பொலன்னறுவை நகர பிதா சானக சிதத் ரணசிங்க, தலைமைச் செயலாளர் எச்.எம்.பி.பண்டார, மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.