உலகம்

செவ்வாய் கிரகம் செல்ல விரும்பும் பயணிகளின் பெயர்களைக் கோருகிறது நாசா

 

செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சிக்குச் செல்லவுள்ள ‘மார்ச்2020’ ரோவர், செவ்வாய்க்கான பயணிகளின் பெயர்களையும் சுமந்து செல்லவுள்ளது.

இதற்காக, செவ்வாய்க்குப் பயணிக்க விரும்புகின்றவர்களின் பெயர் விபரங்களை நாசா கோரியுள்ளது.

தெரிவு செய்யப்படுகின்ற பயணிகளது பெயர் விபரங்கள், விசேட ‘சிப்பில்’ பதிவு செய்யப்பட்டு செவ்வாய்க் கிரகத்துக்கு இந்த ரோவர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

2020ம் ஆண்டு ஜூலை மாதம் செவ்வாய் நோக்கிச் செல்லவுள்ள இந்த ரோவர், 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் செவ்வாயில் தடம்பதிக்கும்.

அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு மாதிரிகளைப் பூமிக்கு கொண்டுவந்தப்பின்னர், செவ்வாய்க்கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி சோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.