உலகம்

செவ்வாய் கிரகத்தில் மர்ம ஒளி – விஞ்ஞானிகள் வியப்பில்

நாசாவினால் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கியூரியோசிட்டி விண்கலம் பல படங்களை அனுப்பி வைத்துள்ளது.
கடந்த 16ம் திகதி எடுக்கப்பட்ட படம் ஒன்றில், செவ்வாயின் மலைப்பாங்கான இடம் ஒன்றுக்கு மேலாக வான்பரப்பில் ஒரு மர்ம ஒளி தோன்றியுள்ளது.
மிக வேகமாக இந்த ஒளி நகரும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது செவ்வாய்கிரகத்தில் வசிக்கின்ற மனிதர்களின் விமானமாக இருக்கலாம் என்று தற்போதே சிலர் கூறி வருகின்றனர்.
ஆனால் நாசா இன்னும் உத்தியோபூர்வமான விளக்கம் எதனையும் முன்வைக்கவில்லை.