உலகம்

செவ்வாய் கிரகத்தில் பெருமளவில் மீதேன் வாயு

நாசாவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கியூரியோசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடத்தி வருகிறது.
தற்போது செவ்வாய் கிரகத்தில் அதிகூடிய மட்டத்தில் மீதேன் வாயு இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் மொத்த வளிமண்டலத்தில் பெரும்பகுதி மீதேன் வாயுவாகும்.
மீதேன் வாயு உருவாவதற்கு உயிரினங்கள் இருக்க வேண்டும். அல்லது கற்களும், நீரும் உராய்வதாலும் மீதேன் வாயு தோன்றும் வாய்;புகள் உள்ளன.
ஆனால் எவ்வாறு இந்த அளவு மீதேன்வாயு செவ்வாய் கிரகத்தில் உருவானது என்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.
அந்த சான்றுகளை சேகரிக்கும் கருவிகளும் கியூரியோசிட்டி விண்கலத்தில் இல்லை.