இலங்கை

செய்தித் துளிகள் !

 

* கண்டி வீதி கலகெடிஹேனவில் பொதுமகன் ஒருவரை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் வாகனம் மஹரகமவில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது. இந்த வாகனத்தின் சாரதி மற்றும் அச்சுறுத்தல் விடுத்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சரண் .விசாரணையின் பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர் .

* குருநாகல் டாக்டர் ஷாபி மீதான விசாரணைகளில் குருநாகல் நீதவானின் செயற்பாடுகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் , நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளது.

* மாணவர்களுக்கும் பல்கலை நிர்வாகத்திற்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கலவரையறையின்றி மூடப்பட்டது.

* மேல் , தென் , சபரகமுவ , வடமேல் , மத்திய , வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களிலும் நாளை கடும் காற்று வீசக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.