இலங்கை

செய்தித் துளிகள் !

* ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்கும் பேச்சு அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு .முன்னதாக இந்த சந்திப்பு நாளை நடைபெறவிருந்தது.

* அமைச்சர் ரிஷார்ட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க தீர்மானித்தது ஜே வி பி

* அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஒருவர் பிணையில் விடுதலை.அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சி டிக்கள் சட்டவிரோதமானவையல்லவென பொலிஸார் மன்றில் தெரிவிப்பு

* இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று மாநாயக்க தேரர்களை சந்திக்கிறது. நாட்டின் நிலைமை குறித்து மாநாயக்கர்களுடன் பேச்சு நடத்தவுள்ளதாக தகவல்.

* குருநாகல் மருத்துவர் குறித்து எந்த முறைப்பாடும் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லையென இலங்கை மருத்துவ சபை தெரிவிப்பு

* இன்று விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தி முக்கிய தகவல்களை வெளியிடப்போவதாக ஞானசார தேரர் அறிவிப்பு