Breaking News

செய்தித் துளிகள் !

 

பூஜித்த – ஹேமசிறிக்கு விளக்கமறியல் !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவ வழக்கு விசாரணை தொடர்பில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ,பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோரின் விளக்கமறியலை பெப்ரவரி மூன்றாம் திகதிவரை நீடிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பௌசியின் மனுவை விசாரிக்கத் தீர்மானித்தது நீதிமன்றம் !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமையை ஆட்சேபித்து பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தாக்கல் செய்த மனுவை மார்ச் 23 ஆம் திகதி விசாரிக்கத் தீர்மானித்தது உயர்நீதிமன்றம்.

ஐ.தே க. தலைவராக கருவை நியமிக்க ஆலோசனை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்கவும் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிக்கவும் ஆலோசனைகள் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை ரணில் இன்னும் தினங்களில் வெளியிடுவாரென அறியமுடிந்தது.நேற்றிரவு ரணில் மற்றும் கரு தனிப்பட்ட சந்திப்பொன்றை நடத்தி இதுபற்றி பெத்து நடத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்கியது நீதிமன்று

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு தமது தரப்பு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க மார்ச் ஆறாம் திகதிவரை கால அவகாசம் வழங்கியது உயர்நீதிமன்றம்.

அரசியலமைப்பு கவுன்சில் 23 ஆம் திகதி !

அரசியலமைப்பு கவுன்சில் எதிர்வரும் 23 ஆம் திகதி பிற்பகல் 12.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.

அமைச்சர் கெஹெலிய வழக்கிலிருந்து விடுதலை !

இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ,அரச அச்சகக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஆகியோர் அரசநிதியை துஷ்பிரயோகம் செய்த வழக்கிலிருந்து விடுதலை