Breaking News

செய்தித் துளிகள் !

* ட்ரோன் பறப்பதற்கான தடை நீங்கியது !

ட்ரோன் கமராக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ,சட்டதிட்டங்களை உரிய முறையில் பின்பற்றி அவற்றை பயன்படுத்துமாறு கேட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

* சிறுமியை வன்புணர்வு செய்த அரசியல்வாதிக்கு 15 வருட சிறை

சிறுமி ஒருவரை வன்புணர்வு செய்த அக்குரஸை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவா சுனில் லியனகேவுக்கு 15 வருட சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்.

* நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு பிணை

அவன்ட்கார்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு பிணை வழங்கியது கொழும்பு விசேட மேல் நீதாய நீதிமன்றம்.