இலங்கை

செய்தித்துளிகள் !

 

* வறட்சியான காலநிலை நீடிப்பதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் சபை வேண்டுகோள். நீர்வெட்டு குறித்தும் பரிசீலனை

* தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தூக்குமேடை நேற்று அதிகாரிகளின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது .மணல் மூட்டையை தூக்கிலிட்டு பரிசோதித்தனர்.

* சுமார் 10 கோடி ரூபா செலவில் பாராளுமன்றத்திற்கு மின்தூக்கிகளை கொள்வனவு செய்யும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார் சபாநாயகர். அதிகளவு செலவென்பதால் மாற்று யோசனைக்கு முஸ்தீபு.

* வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடுநிலை வகிக்க உத்தேசம். ஜனாதிபதி அலுவலக நிதி ஒதுக்கீடும் இருப்பதால் எதிர்த்து வாக்களிப்பதா என்பது பற்றி ஆலோசனை.

* வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் நாளை மாலை முக்கிய பேச்சு.