Breaking News

செயற்பாட்டு இயக்குனர்கள் நியமனங்களை ரத்துச் செய்தது அரசு !

 

அரச நிறுவனங்களின் சபைகள் மற்றும் மன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட செயற்பாட்டு உறுப்பினர்கள் ( Working Director )அனைவரின் நியமனங்களையும் இரத்துச் செய்யுமாறு நிதியமைச்சு அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த பதவிநிலை எவருக்கும் வழங்கப்படக் கூடாதென ஜனாதிபதி அறிவித்திருந்த போதும் சில இடங்களில் இப்படியான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே செயற்பாட்டு இயக்குனர் என்ற பதவி வழங்கப்படக் கூடாதென அறிவுறுத்தியுள்ள நிதியமைச்சு அப்படி வழங்கப்பட்டவைகளை இரத்துச் செய்யுமாறும் கேட்டுள்ளது .