உலகம்

செயற்கை கருவூட்டல் மூலம் சிறுத்தைக்குட்டி

.அழிந்து வரும் நிலையில் இருப்பதால் உயிரியல் பூங்காவில் உள்ள சிறுத்தைகளை செயற்கை முறையில் கருவூட்டல் செய்து குட்டிகளை பிறக்க வைக்க பிரேசில் அரசாங்கம் தீர்மானித்தது .

இதையடுத்து சா போலோ நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள பெண் சிறுத்தை ஒன்று கடந்த மாதம் குட்டி ஈன்றதை ஆய்வாளர்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்தனர்.

ஆனால் அவர்கள் கவனக்குறைவாக இருந்த போது, சிறுத்தை தனது குட்டியை தானே சாப்பிட்டமை தெரியவந்தது. இதனால் கவலையடைந்த விஞ்ஞானிகள், ஆனாலும் தங்களின் முயற்சிகள் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர்.