Breaking News

செப்புத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு பிணை வழங்கிய நீதிபதி மீது முறைப்பாடு

 

தற்கொலைத் தாக்குதல்தாரி மொஹமட் இன்சாஃப் அஹமட்டுக்கு சொந்தமான வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் இருந்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேருக்கு அண்மையில் பிணை வழங்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதுதொடர்பில் வெல்லம்பிட்டி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி காமினி ஹேவாவிதான நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாம் குறித்த ஒன்பது பேருக்கும் பிணை வழங்க வேண்டாம் என்று வாய்மூலமும் எழுத்து மூலமும் கோரி இருந்த போதும், நீதிபதி அவற்றை கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளதாக அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.