விளையாட்டு

சென்னையை கவிழ்த்தது மும்பை !

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், நடப்பு சம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் முன்னாள் சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 15-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கி மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.. மும்பை அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக சூர்யா குமார் யாதவ் 59 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கினாலும் சோபிக்கவில்லை. தோனி 12 ஓட்டங்களை மட்டுமே பெற்றார் . 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மட்டுமே பெற்றது சென்னை.( ஸ்கோர் கார்ட் இணைப்பு )