விளையாட்டு

சென்னையும் மும்பையும் இன்று மோதல் – பரபரப்பு போட்டியாக இருக்கும் !

 

சென்னை சுப்பர்கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி இன்றிரவு மும்பையில் நடைபெறவுள்ளது.

சென்னை அணி தொடர்ந்து 3 வெற்றிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 1 வெற்றி, 2 தோல்விகளுடன் துவண்டுள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் மும்பை 14, சென்னை 12 முறைகள் வென்றுள்ளன.

எனினும் சென்னை அணி தற்போது அணித்தலைவர் தோனியின் அபார ஆட்டத்தால் கூடுதல் பலம் பெற்றுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 27/3 என தடுமாறிக் கொண்ட அணியை தோனி அபாரமாக ஆடி 75 குவித்து வெற்றி பெறச் செய்தார். துடுப்பாட்டம் – பந்துவீச்சு இரண்டிலும் சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்துகிறது. சென்னை அணியில் வேகப்பந்து வீச்சை காட்டிலும் சுழற்பந்து வீச்சு வலுவாக உள்ளது. ஆனால் மும்பை மைதானம் வேகம், பவுன்சர்களுக்கு உதவியாக இருக்கும்.

அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா, குயிண்டன் ஆகியோரின் துடுப்பாட்டத்தில் அதிகம் சார்ந்துள்ளது. மேலும் வலுவான வேகப்பந்து வீச்சை கொண்டுள்ள இதில் பும்ரா, பென் கட்டிங், அஸாரி ஜோசப், லசித் மாலிங்க ஆகியோர் உள்ளனர்.

சொந்த மைதானத்தில் மும்பை அணி வெற்றி பெறுமா அல்லது சென்னை ஆதிக்கம் செலுத்துமா என்பது இன்று இரவு தெரியும்.