உலகம்

சென்னையில் நீர் பஞ்சம்

 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நான்கு நீர்நிலைகளிலும் நீர் வற்றியுள்ள நிலையில், பாரிய நீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் நகரில் குடிநீர் விநியோகிக்கும் பௌசர்களுக்காக மக்கள் வரிசையில் நிற்க வேண்டியநிலை அதிகரித்துள்ளது.

பல உணவகங்கள் நீரில்லாமையால் மூடப்பட்டுள்ளன.

அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, ‘சென்னையை மழையால் மாத்திரமே காப்பாற்ற முடியும்’ என்று கூறியுள்ளார்.