இலங்கை

“செக்கியுரிட்டி கவுன்சிலுக்கே என்னை அழைப்பதில்லை? என்ன செய்வேன் நான்” – குமுறினார் ஐ.ஜீ.பி 

தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களுக்கு கூட என்னை அழைப்பதில்லை . அப்படியான நிலையில் நாட்டின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது ?
இப்படிக் குமுறினார்  பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர. சபாநாயகரின் தலைமையில் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கினார்.
முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டும் ஏன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என கட்சித் தலைவர்கள் கேட்டனர்.
தேசிய பாதுகாப்பு சபைக்கு தன்னை அழைப்பதில்லையென குறிப்பிட்ட பொலிஸ் மா அதிபர் இப்படியான ஒரு நிலையில் என்ன செய்வதென்றும் கேள்வியெழுப்பினார்.
இந்த எச்சரிக்கை எல்லாவற்றையும் உரிய தரப்புக்களுக்கு அறிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
அவசர கால சட்ட அமுலாக்கத்திற்கான பிரேரணை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நாளை மறுதினம் விவாதம் நடத்தப்படும்.