உலகம்

சூரியன் பற்றிய புதிய ஆய்வைத் ஆரம்பிக்கும் நாசா

dims.jpeg
அமெரிக்காவின் தேசிய விண்வெளி மையமான நாசா, சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், அதற்கான விண்கலத்தை ஏற்கனவே அனுப்பியுள்ளது.
தற்போது இரண்டு முக்கிய விடயங்கள் குறித்து நாசா தமது ஆய்வை மையப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி சூரியன் தம்மில் இருந்து துகள்கள் மற்றும் சக்தியை எவ்வாறு வெளியனுப்புகிறது? என்பதையும், அவற்றை பூமி எவ்வாறு உள்ளீர்க்கிறது என்பதையும் நாசா ஆய்வு செய்யவுள்ளது.
பாரிய அளவான சக்திகளையும் துகள்களையும் சூரியன் வெளியேற்றும் செயன்முறை, சூரிய புயல் என்று கூறப்படுகிறது.
இதனால் உருவாக்கப்படுகின்ற கட்டமாற்றங்கள், விண்வெளி காலநிலை என்று அழைக்கப்படும்.
இந்த விண்வெளி காலநிலையில் ஏறபடுகின்ற மாற்றங்கள், பூமியில் மனிதனின் செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன.
இதன் முழுமையான செயல்முறையை புரிந்துக் கொள்வதற்காக புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.