உலகம்

சூடுபிடிக்கும் பிரதமர் பதவிக்கான போட்டி.

 

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் 4 பேர் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளனர்.

இறுதியாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் 27 வாக்குகளை மாத்திரமே பெற்ற சர்வதேச அபிவிருத்தி செயலாளர் ரோய் ஸ்டுவார்ட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

போரிஸ் ஜான்சன் 143 வாக்குகளை பெற்றிருந்தார்.

அவர் ஏற்கனவே பெற்ற வாக்குகளைவிட 14 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.

ஜெரமி ஹன்ற் 54 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திலுள்ளார்.

மைக்கல் கோ 51 வாக்குகளையும் சஜித் ஜாவிட் 38 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

நான்காம் சுற்று வாக்கெடுப்பு இன்றைய தினம் நடைபெற உள்ளது.