உலகம்

சூடானில் தீவிர போராட்டங்கள்

சூடானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களை கலைப்பதற்காக அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியுள்ளனர்.

அங்கு சிவில் அரசாங்கத்தை உருவாக்க வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் நாடுதழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாதுகாப்பு படையினர் கொடூரமாக நடந்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

நேற்று மாத்திரம் நான்கு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.