உலகம்

சூடானில் சிவில் சட்ட அமுலாக்க பேச்சுவார்த்தை நிறுத்தம்

சூடானில் சிவில் சட்டத்தை அமுலாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அங்கு ஏற்பட்டிருந்த யுத்தத்தின் பின்னர், இடைநிலை இராணுவ பேரவை ஒன்று உருவாக்கப்பட்டு, இராணுவ ஆட்சி அமுலாக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு மூன்று ஆண்டுகளுக்கு சிவில் சட்டத்தை அமுலாக்கி, மக்களாட்சியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த போதும், பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நாடெங்கிலும் ஆர்ப்பாட்டக் காரர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளை நீக்கும் வரையில் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று இராணுவம் அறிவித்துள்ளது.