உலகம்

சூடானில் அமைதி நடவடிக்கை

 

சூடானின் ஆளும் இராணுவ சபையும் எதிர்க்கட்சி தலைவர்களும் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இது நாட்டிற்கு ஒரு ‘வரலாற்று முக்கிய தருணம்’ என்று சூடானின் ஆளும் இராணுவ சபையின் துணைத் தலைவர் மொஹமட் ஹம்தான் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரை இராணுவம் வெளியேற்றியதில் இருந்து சூடான் அமைதியற்றுள்ளது.

போராட்டக்காரர்கள் மக்களாட்சியை நிறுவ வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவ்வாறான போராட்டங்களின் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 3ம் திகதி குறைந்தபட்சம் 128 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், அதிகாரத்தின் உயர்மட்ட – இறையாண்மை சபை ஒன்றை உருவாக்கி, மூன்று ஆண்டுகளுக்கு சுழற்சிமுறையில் நடத்திச் செல்ல ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.