Breaking News

சுவிஸ் தூதரக பணியாளர் அச்சுறுத்தல் – வெளிநாட்டமைச்சு விசேட அறிக்கை !

 

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக பணியாளர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் இதற்கு தூதரகத்தின் ஒத்துழைப்பும் முழுமையாகத் தேவை எனவும் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றில் கூறியுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் பாதுகாப்பமைச்சின் செயலாளரும் சுவிற்சலாந்து தூதுவரை சந்தித்து இதுவரை நடந்த விசாரணைகளின் முன்னேற்றத்தை எடுத்துக் கூறியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.