Breaking News

சுவிஸ் தூதரகப் பணியாளர் மீதான பிரயாணத் தடை நீடிப்பு !

 

சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டிலிருந்து வெளியேற விதித்த தடையை நீடித்து உத்தரவிட்டது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்.

நேற்று சுவிஸ் தூதரக பணியாளரிடம் 9 மணி நேரம் நடந்த விசாரணை குறித்து சி ஐ டி இன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.

இதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை சுவிற்சலாந்து தூதரக பணியாளர் நாட்டிலிருந்து வெளியேற தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று மாலை மீண்டும் சம்பந்தப்பட்ட பணியாளரிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக சி ஐ டி யினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.