Breaking News

சுவிற்சலாந்து தூதரக பணியாளர் சி ஐ டி முன்னிலையில் ஆஜரானார் !

வாகனம் ஒன்றில் கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட சுவிற்சலாந்து தூதரக பணியாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று மாலை ஆஜரானார்.

அவரிடம் இப்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படின் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டது.

9 ஆம் திகதிக்குமுன்னர் அவர் வாக்குமூலம் வழங்க வேண்டுமென முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.