விளையாட்டு

சுமித்தையும் வோர்னரையும் கேலி செய்ய வேண்டாம் – லாங்கர் கோரிக்கை

 

பந்து சுரண்டல் குற்றச்சாட்டில் ஸ்டீவ் சுமித்தும் டேவிட் வோர்னரும் 12 மாத தடைக்குப் பின்னர், தற்போது உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுகின்றனர்.

அவர்கள் பயிற்சிப் போட்டியில் பங்குபற்றிய போது இரசிகர்களால் கூச்சல் எழுப்பப்பட்டு கேலி செய்யப்பட்டனர்.

அவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டாம் என்று கிரிக்கட் இரசிகர்களிடம் அவுஸ்திரேலிய பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் கோரியுள்ளார்.

அவர்கள் பிழை செய்தமைக்கு அதிக விலையை கொடுத்திருக்கிறார்கள்.

மீண்டும் அவர்களை காயப்படுத்தக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.