விளையாட்டு

சுமித்தும் வோர்னரும் ‘ஃபோமிற்கு’ திரும்பியது பெரும் மகிழ்ச்சி – ஏரன் ஃபின்ச்

 

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர்களான ஸ்டீவ் சுமித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் இருவரும் பந்து சுரண்டல் குற்றச்சாட்டுக்காக 12 மாதங்கள் தடைக்கு முகம் கொடுத்து மீண்டும் கிரிக்கட்டுக்கு திரும்பியுள்ளனர்.

உலகக்கிண்ணத் தொடரில் அவர்களின் துடுப்பாட்டம் மிகச்சிறப்பாக உள்ளது.

இது இன்று நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அதிக வலுவை சேர்க்கும் என்று நம்புவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஏரன் பின்ச் தெரிவித்துள்ளார்.