உலகம்

சுனாமி எச்சரிக்கையை நீக்கியது இந்தோனேசியா

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

6.9 மெக்னிரியுட் அளவில் இந்த அதிர்வு பதிவானது.

கிழக்கு இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுக்கு அருகில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.

இதில் பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக இந்த பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்வு மற்றும் சுனாமி அனர்த்தங்கள் பதிவாகிவருகின்றன.

இறுதியாக அங்கு ஏற்பட்ட நில அதிர்வினால் ஆயிரக்கணக்கானவர் உயிரிழந்தனர்.