Breaking News

சுதந்திர சதுக்கத்தில் மீட்கப்பட்ட சடலம் குறித்து தீவிர விசாரணை !

 

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டவரின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுதந்திர சதுக்க வளாகத்திலிருந்து இன்று காலை 7 மணியளவில் ஆணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஆணொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், சடலத்திற்கு கீழிருந்து 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சடலம் மீதான நீதவான் விசாரணைகள், கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் இன்று முற்பகல் நடத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்ட பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.