Uncategorized

சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்தானது

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் அரசியல் கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தம் சற்று முன்னர் இலங்கை மன்றக் கல்லூரியில் கைச்சாத்தானது.

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசமும் பரஸ்பரம்ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இரண்டு கட்சிகளினதும் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலின் போது இதனடிப்படையில் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளன.