இலங்கை

சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று – மைத்திரியின் கையில் இறுதி முடிவு !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது அல்லது தனித்து போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவை எடுக்க ஸ்ரீ லங்கா மத்திய குழு இன்று இரவு கூடவுள்ளது.

ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கூடவுள்ள இந்த கூட்டத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ளது.

முன்னதாக நேற்றிரவு சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் ,தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் நடந்தது.அதில் கலந்து கொண்ட அமைப்பாளர்கள் ,எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்துவமாக செயற்பட வேண்டுமென வலியுறுத்தினர்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்திற்கு ஆதரவளிப்பது குறித்து பலர் இங்கு அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இன்றைய கூட்டத்தில் ஜனாதிபதி இறுதி முடிவை எடுக்க மத்திய குழு அங்கீகாரத்தை வழங்கவுள்ளது.கட்சியின் உயர்மட்டத் தகவல்களின்படி மைத்திரியின் ஆதரவு கோட்டாவுக்கே வழங்கும் சாத்தியப்பாடு இருப்பதாக அறியமுடிகின்றது.