உலகம்

சுட்டுவீழ்த்தப்பட்ட எம்.எச். 17 தொடர்பாக 4 பேர் மீது கொலை குற்றச்சாட்டு

மலேசியாவின் mh17 விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான கொலை குற்றம் சுமத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 298 பேருடன் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் அனைவரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பில் 3 ரஷ்யர்கள் மற்றும் ஒரு உக்ரேனியருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு அடுத்த வருடம் மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்