சீருடை விடயத்தில் எந்தவொரு உள்நோக்கமும் கிடையாது- யாழ் முதல்வர் வி.மணிவண்ணன்
கொழும்பு மாநகர சபையை பின்பற்றியே, யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
சீருடை வழங்கிய விடயத்தில் வேறு எந்த உள்நோக்கமோ, திட்டமோ தங்களுக்கு இருக்கவில்லை எனவும் வி.மணிவண்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர ஆணையாளர் மற்றும், கண்காணிப்பு காவலர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பாக இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.