உலகம்

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது !

 

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஒக்டோபர் முதலாம் திகதியான இன்று பெய்ஜிங்கில் உள்ள தியன்மென் சதுக்கத்தில் அணிவகுப்பும் பொது மக்கள் பேரணியும் சிறப்பாக நடைபெற்றன. அவை, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

”சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி இலக்கை நோக்கி சீனா முன்னேறி வருகின்றது. முன்னேற்றப் போக்கில், ஐந்து துறைகளில் சீனா ஊன்றி நிற்க வேண்டும்” என்று சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் உரை நிகழ்த்திய போது வலியுறுத்தினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, மக்களின் முதன்மை தகுநிலை, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச பாதை, அமைதியான ஒன்றிணைப்பு, ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்னும் கோட்பாடுகள், அமைதி வளர்ச்சிப் பாதை ஆகியவற்றில் ஊன்றி நிற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஒன்றுபட்டு செயல்பட்டு, ஐந்து துறைகளில் ஊன்றி நின்றாலும், சீன மக்கள் மற்றும் சீனதேசம் முன்னேறி வரும் காலடியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று சீன மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.