உலகம்

சீன – அமெரிக்க வர்த்தக போர் – இறுதிநேர தீர்வு முயற்சி

சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக போரை தீர்ப்பதற்கான இறுதிநேர பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
அமெரிக்கா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்ற 200 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு வரியை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இந்த அதிகரிப்பு அமுலுக்கு வருவதற்கு முன்னதாக இந்த விடயத்தை தீர்த்துக் கொள்ள இரண்டு தரப்பும் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இந்த பிரச்சினையானது, சர்வதேச பொருளாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.