சீனா வந்தாலும் இயக்குவது நாங்கள் தான் – ரணில்
அம்பாந்தோட்டையில் துறைமுகம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் சீனா முதலிட்டாலும் அவற்றின் கட்டுப்பாடு இலங்கை கையில் இருக்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஆரம்பமான 3-வது ஆசிய ஐரோப்பிய அரசியல் அமைப்பின் 2 வது நாள் அமர்வில் கலந்து கொண்டு பேசிய ரணில் , தெற்கு துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் இலங்கை நல்லுறவுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்திய பாதுகாப்புச் செயலர் கொழும்பு வர முன்னரே முன்கூட்டி இந்த கருத்தை வெளியிட்ட பிரதமர்
அம்பாந்தோட்டை துறைமுகம் சீன ராணுவ தளமாக மாறிவிடும் என்று சிலர் நினைப்பது தவறானது என்றும், அங்கு இலங்கை கடற்படை முகாம்தான் இருக்கும் எனவும் தெரிவித்தார்.