உலகம்

சீனாவில் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்கள்கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில்  100 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்களை கண்டுபிடித்துள்ளதாக, தொல்லுயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

22.7 சென்ரி மீற்றர் முதல் 82 சென்ரி மீற்றர் வரை நீளமுள்ள 20ற்கும் மேற்பட்ட கால்தடங்கள் லான்க்சி நகரில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக சீன புவி அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஜிங் லிடா தெரிவித்துள்ளார்.

டைனோசர்களின் உடல் நீளம் 3.8 முதல் 14 மீற்றர் வரை இருக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கால்தடங்கள் கிரட்டேசியஸ் காலத்திற்கு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று நம்பப்படுகிறது.

இது இப்பகுதியில் ஏராளமான ‘சுவுரோபொட்ஸ்’ என அழைக்கப்பட்டும் டைனோசர்கள் வாழ்ந்துள்ளமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீர் மற்றும் புல் நிறைந்ததாக காணப்படும் இந்த பிரதேசத்தில், தாவர உன்னி டைனோசர்களுடன் கூட்டு வாழ்வில் மாமிச டைனோசர்கள் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர், எனினும் இதுவரை அதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

இந்த அரிய கால்தடங்களை சிறப்பாகப் பாதுகாக்க தொல்லுயிரியல் ஆய்வாளர்கள்  உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.