உலகம்

சீனாவில் வெளிநாட்டு முதலீட்டுத் துறையின் சட்ட அமைப்பு முறை

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த கடந்த 40 ஆண்டுகளில், சீனப் பொருளாதார வளர்ச்சித் துறையில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

வெளிநாட்டு முதலீட்டுத் துறையில் பயன்படுத்தப்பட்டிருந்த 3 சட்டங்களால் புதிய காலத்தின் தேவையைச் சிறப்பாக நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி உறுப்பினரும் சீன வணிகர் குழுவின் தலைமை இயக்குநருமான லீ சச்சியேன்ஹுங் 9ம் நாள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனவே புதிய வெளிநாட்டு முதலீட்டுச் சட்டத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.

இது மூலம் வெளிநாட்டுத் திறப்பை மேலும் விரிவாக்கும் சீனாவின் மனவுறுதி மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் அதே வேளையில் சீனாவில் ஆட்சி அமைப்புமுறை மற்றும் திறனின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவிக்கும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.