Breaking News

சீனாவில் சிக்கியுள்ள மாணவர்களை உடனடியாக அழைத்து வர ஏற்பாடு !

 

கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் பரவிவரும் சூழ்நிலையில் அங்குள்ள மாணவர்களை உடனடியாக அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி வுஹான் மற்றும் சிச்சுவான் மாகாணங்களில் உள்ள சுமார் 150 மாணவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம் கொழும்பு அழைத்துவரப்படுவார்களென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் நேரடியாக வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.