உலகம்

சீனப் பொருட்கள் புறக்கணிப்பால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் நிலை

சீனப் பொருட்கள் புறக்கணிப்பு நடவடிக்கையால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் என அந்த நாட்டு அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸில் (global Times) செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

லடாக்கில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் சீன இராணுவத்தால் கொல்லப்பட்டதை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோபம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. மேலும் சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த புறக்கணிப்பு நடவடிக்கையால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் என அந்த நாட்டு அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த பத்திரிகையில் ‘சீன தயாரிப்புகள், கையடக்கத் தொலைபேசி அப்னிகேஸன்களை இந்தியா புறக்கணித்தால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும் என் தலைப்பில் குறித்த பத்திரிகையில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதில், இந்தியாவில் சீன பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் அந்த நாட்டு பொருட்கள் வர்த்தகத்தில் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்தியாவில் சீன சந்தை விரிவாக்கத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளால் இரு நாட்டு உறவுகள் மேலும் பாதிக்கும் என எச்சரித்துள்ள அந்த பத்திரிகை, எனினும் சீன பொருட்களின் விலை உள்ளிட்ட வாடிக்கையாளர் நலன் சார்ந்த அம்சங்களால் இந்த பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.