Breaking News

சிவில் அமைப்புக்கள் ரணிலுடன் சந்திப்பு – வேட்பாளர் விவகாரத்தை இறுதிப்படுத்த வலியுறுத்து !

சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று காலை பிரதமர் ரணிலை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் இழுபறியில் உள்ள நிலையில் அது தொடர்பில் ஒரு இறுதி முடிவுக்கு விரைவில் வருமாறு இங்கு பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தம்பர அமில தேரர், விக்கிரமபாகு கருணாரத்ன , ஜெஹான் பெரேரா,பேராசிரியர் சந்திரகுப்தா உட்பட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.