Breaking News

சில இடங்களுக்கான ரயில் சேவைகள் நிறுத்தம் – விசேட விடுமுறையை தொடர அரசு ஆலோசனை !

அதிகரித்துவரும் கொரோனா தாக்கம் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள விசேட விடுமுறையை நீடிப்பது குறித்து ஆலோசனை நடத்திவரும் அரசு , குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்காவது தொடர்விடுமுறையை அறிவிப்பது குறித்து ஆராய்கிறது.

நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும்.

இதேவேளை கொரோனா தாக்கம் கூடுதலாக இருக்குமென சந்தேகிக்கப்படும் பகுதிகளான நீர்கொழும்பு புத்தளம் , சிலாபம் பகுதிகளுக்கான ரயில் சேவையை தற்காலிகமாக இடைநிறுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதேசமயம் தென்கொரியா , இத்தாலியிலிருந்து வந்த சுமார் 170 பேர் தங்களை பதிவு செய்துகொள்ளுமாறும், தலைமறைவாக இருந்து பின்னர் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளக் கூடாதென்றும் அரசு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

மார்ச் 01 -15 வரை ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து பதிவு செய்து கொள்ளலாமென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்று இரவு 8 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.