இலங்கை

சிலாபம் விபத்து – அரசியல் பிரமுகர் பலி

 

சிலாபம் மாதம்பை பிரதான வீதியின் சுதுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலாபம் பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் நுவன் மெண்டிஸ் ( 44 வயது ) உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர் மீது லாரி மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது . நேற்றிரவு இந்த சம்பவம் நடந்த கையோடு அவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும் காயங்கள் காரணமாக உயிரிழந்தார்..