இலங்கை

சிறையிலிருந்து வெளியேறினார் ஞானசார தேரர்

 

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரர் சற்று முன்னர் வெலிக்கடை சிறையில் இருந்து வெளியேறினார்

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் அவர் நேற்றைய தினமே விடுவிக்கப்பட்டாலும் ஆவணங்கள் சரிப்படுத்தப்பட்ட பின்னர் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டார்

அவரை வரவேற்க வெலிக்கடை சிறைச்சாலை முன் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.பிக்குமாரும் வந்திருந்தனர்.